திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பிறபித்துள்ள 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் மீறுவதாகவும், இருசக்கர வாகனத்தில் வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோரை போக்குவரத்து காவல் துறையினர் மறித்து சோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகன ஓட்டிகளை அழைத்துத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வேன், வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவேன், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை கவனித்து நடப்பேன், மீறினால் அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி மொழி வாசிக்க அதனை இருசக்கர வாகன ஓட்டிகள் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 450 வழக்குகள் பதிவு செய்து, 400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும். அதை மீறுவோர் மீது கடுமையான தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: 'ட்ரோன்' மூலம் மதுரையை கண்காணிக்கும் காவல் துறை!