ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்!

author img

By

Published : Sep 19, 2019, 11:21 AM IST

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டப் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் ஆய்வு செய்தார்.

collector maheshwari

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏரிகளை ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தப்படும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமராமத்து திட்டப்பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் மூன்று பெரிய ஏரிகளான பணத்தபேடு கண்டிகை, ஆருர்கண்ணம்பாக்கம் புதிய ஏரி, சின்ன ஏரி, செல்லியம்மன் குளம், ஆகிய ஏரிகளில் 75 முதல் 85 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

அணைகளை பார்வையிட்ட காட்சி
அணைகளை பார்வையிட்ட காட்சி

தொடர்ந்து பேசுகையில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை கிராம பொதுமக்கள் மற்றும் பாசன விவசாயிகள் குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ரூபாய் 10 கோடியே 17 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுகிறது. மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக 200 சிறுபாசன ஏரிகளையும் 1612 குளம் குட்டை மற்றும் ஏரிகள் உள்ளிட்டவைகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியங்களில் பல்வேறு ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்

Body:திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியங்களில் பல்வேறு ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டம் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பல்வேறு இடங்களில் ஏரிகளை ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தப்படும் குடி மராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்

தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டப்பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று பொதுப்பணித்துறை சார்பில் மூன்று பெரிய ஏரிகள் அனைத்தும் பணத்த பேடு கண்டிகை ஆருர்கண்ணம்பாக்கம் புதிய ஏரி சின்ன ஏரி செல்லியம்மன் குளம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் மஞ்ச காரனை ஏரி கூரம் பார்க்கும் ஏரி .

இந்த ஏரிகளில் 75 முதல் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது மேலும் பல ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத ஏரிகளை தனி கவனம் செலுத்தி தூர்வாரி ஆழப்படுத்த கரைகளை பலப்படுத்தும் பணிகள் கிராம பொதுமக்கள் மற்றும் பாசன விவசாயிகள் குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தங்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் சார்பாக இப்பணிகள் ரூபாய் 10 கோடியே 17 லட்சம் மதிப்பில் குடி மராமத்து பணிகள் மூலம் தூர் வாரி கரைகளை பலப்படுத்துவதற்காக புதுப்பிக்கும் கலை சீரமைக்க பாசன கால்வாய் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது இவற்றில் தமிழக அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையை பாசன விவசாயிகளின் பங்களிப்பாக 10 சதவீத தொகையே செலவு செய்யப்பட்டுள்ளது ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக 200 சிறுபாசன ஏரிகளையும் 1612 குளம் குட்டை மற்றும் ஏரிகள் ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது இந்த அனைத்து பணிகளை விரைந்து முடிப்பதற்கு செய்தியாளர்களுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏரிக் கரைகளில் உள்ள பள்ளங்களில் பண மரக்கட்டைகள் மற்றும் வேப்ப மரம் மற்றும் புங்கமரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நட்டு வைத்தார் மாவட்ட ஆட்சியர் உடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் குடி மராமத்து பணிகள் அமைக்கும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.