ETV Bharat / state

'நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்' - திருவள்ளூர் ஆட்சியர்

திருவள்ளூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாக திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 24, 2020, 6:57 PM IST

visit
visit

திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்கள் மண்டல குழுக்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் 70 கிராமங்கள் அமைந்துள்ளன. மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்படும் முன்னெச்சரிக்கைகளை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, நகராட்சி, பேரூராட்சி துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட கூடிய பகுதிகளாக 39 இடங்களும் மிதமான பாதிப்பு ஏற்பட கூடிய வகையில் 44 பகுதிகளும் குறைவாக பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளாக 42 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்களாக வைரவன் குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிபாளையம், ஏலாவூர் உள்ளிட்ட 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 660 தற்காலிக தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கால்நடைகளை காப்பாற்ற 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத் துறை வாயிலாக 42 மருத்துவக் குழுக்களும் 32 இடங்களில் அவசர கால மருத்துவ ஊர்தி தேவையான மருந்து பொருள்கள் ஊராட்சி அளவில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும் மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமல்லாது கட்டுப்பாட்டு அறை 0442 766 417 7, 04427 666 746 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் 94 443 1786 என்ற வாட்ஸ்அப் எண் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.