ETV Bharat / state

மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு - மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

திருவள்ளூர்: ரூ. 40 கோடி மதிப்பீட்டில் நடக்கும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை மாவட்ட் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்
திருவள்ளூர்
author img

By

Published : Oct 9, 2020, 11:14 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சி , பிராடிஸ் சாலை பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ. 28.04 கோடி மதிப்பீட்டில் 25 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் , பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் , காட்டுப்பாக்கம் ஊராட்சி , ஸ்ரீநகர் பகுதியில் பொது நிதியின் கீழ் ரூ. 5.98 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் , திருவேற்காடு நகராட்சி , நூம்பல் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.5.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரும் நகராட்சி நிர்வாகங்களின் ஆணையரும் ஆய்வு செய்தனர்.

அதேபோல், திருவேற்காடு நகராட்சி , அயப்பாக்கம் டி.டி.எஸ் . தகர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ .4.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் , வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் , அயப்பாக்கம் ஊராட்சியில் மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ . 6.09 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் கல குளத்தினையும் , ஆவடி மாநகராட்சி , ராஜ்பாய் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பாக , ரூ .6 : 30 இலட்சம் மதிப்பீட்டில் 3.1 கி.மீ. நீள அளவுள்ள பருத்திப்பட்டு அயப்பாக்கம் வடிநீர் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் ஆவடி மாநகராட்சி , பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக வெட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள், திருநின்றவூர் இந்திரா நகர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பாக , ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் திருநின்றவூர் முதல் தண்டுரைவரை உள்ள 4 கி.மீ. நீளமுள்ள கால்வாயினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளையும் , திருநின்றவூர் பேரூராட்சி , பெரியார்நகர் பகுதியில் ரூ . 1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் , திருவள்ளுர் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரூ .8 இலட்சம் மதிப்பீட்டில் 15 கி.மீ. நீளமுள்ள பெரிய தாய் காலவாயினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளையும் அவர்கள் ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.