திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குருராஜர் கண்டிகையில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 22) இதன் நிர்வாகிகள் வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 23) காலை கோயிலைத் திறக்க வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோயிலில் இருந்த உண்டியல், எல்இடி டிவி ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்டப் புகாரின் பேரில் கவரைப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கோயில் உண்டியலை அருகில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைியும் படிங்க: யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!