திருவள்ளூர் மாவட்டம், பெத்தூர் கிராமத்தில் உள்ள சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று கேட்பாரற்று நிற்பதாக வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் காரில் சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு டன் எடையுள்ள மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைக் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம்