ETV Bharat / state

கொத்தடிமைகளாக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஒடிசாவினர் மீட்பு!

திருவள்ளூர்: புன்னப்பாக்கம் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

thiruvallur at punnapakkam Brick Kiln more than 200 odisha labourers rescued!
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஒரிசாவினர் மீட்பு!
author img

By

Published : Feb 19, 2020, 10:57 AM IST

திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் ஜேடி பிரிக்ஸ் ஜெயச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருவதாக மாவட்ட சட்டப்பணிகள் குழு ஆணைக்கு தகவல் வந்துள்ளது.

அதன் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா, வருவாய்த்துறை அலுவலர்களுடன் சோதனை மேற்கொண்டபோது அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் கொத்தடிமை பணியாளர்களாக இருந்ததைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும் தலைமறைவாகி உள்ள செங்கல் சூளை உரிமையாளர் ஜெயச்சந்திரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட அனைவரும் ஊத்துக்கோட்டையில் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு கணக்கெடுப்புக்குப் பின்னர் அங்கிருந்து சான்றிதழ், நிவாரண நிதி வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 200-க்கும் மேற்பட்ட ஒடிசாவினர் மீட்பு!

இதையும் படிங்க: முரசொலி நில விவகாரம் - பட்டியலின ஆணையத் தலைவரிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.