திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, எம்ஜிஆர் இளைஞர் அணி, அம்மா பேரவை ஆகிய கிளைக்கழக உறுப்பினர்களுக்கான சேர்க்கை படிவங்களை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, "வருகிற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.ஹரி, மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளரும் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.எம்.நரசிம்மன், இளைஞர் அணியினர், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி: தொண்டர்கள் ஆவேசம்