திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கண்ணபாளையம் ஊராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை அழிக்கும் பணியில் அப்பகுதி தேர்தல் அலுவலர் யோகலட்சுமி ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதிமுக கண்ணபாளையம் ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் என்பவர், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து ஆவடி காவல்துறையினருக்கு யோகலட்சுமி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட ஆறுமுகத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கண்ணபாளையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: