திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த திருமலை நகர் மீனவர்கள் பழவேற்காடு ஏரிக் கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்திவிட்டும் வலைகளை அப்பகுதியில் வைப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடி வலைகள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள்ளாக 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பபட்டது. அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 10நாட்களுக்கு முன்பு வலைகள் இதேபோல் எரிந்த சம்பவம் அப்பகுதியில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஊரடங்கினால், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கும் திருமலை நகர் கிராம மக்கள் தற்போது மீன்பிடி வலைகள் எரிந்து நாசமானதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுக்கடலில் 'ஐலேசா' பாடல் பாடி அசத்திய மீனவர்கள்!