ETV Bharat / state

கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய கொள்ளையர்கள்! - robbery at temple

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thief stolen  jewels from temple
கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள்
author img

By

Published : Nov 27, 2019, 7:52 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற பூந்தமல்லி காவல்நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர், கோவிலைச் சோதனை செய்தபோது, மர்மநபர்கள் கோயிலில் வைத்திருந்த உண்டியலையும், அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 5 பவுன் தாலியையும் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள்

அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தியுடன் மாணவர்கள் உலா...! போலீஸ் விசாரணை...!

Intro:பூந்தமல்லி அருகே கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிய மர்ம நபர்கள்Body:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம், கணபதி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோயிலின் நடை சாத்தப்பட்டது. இன்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள் கோயிலின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் பாரதி கொள்ளை சம்பவம் நடந்த கோவிலை சோதனை செய்தார்.Conclusion:அப்போது கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கோயிலில் வைத்து இருந்த உண்டியலையும், அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 5 பவுன் தாலியையும் தூக்கி சென்றுவிட்டனர். அந்த உண்டியலில் சுமார் ரூ.15 ஆயிரம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.