திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிகளின் துணைத் தலைவர் தேசிங்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசர், பூவிருந்தவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாகமுகவர்கள் செயல்படும் விதம் குறித்து எடுத்துரைத்தனர்.
அப்போது பேசிய நாசர், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும், தமிழ்நாட்டில் திமுக தொடர்ந்து பிரதான கட்சியாக இருந்துவருகிறது. கடந்த எம்.பி. தேர்தலில், பாக முகவர்களின் பணியால்தான் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றிபெற்றது.
ஆளும் கட்சியினர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அஞ்சல் வாக்குகளில் முறைகேடு செய்ய காத்திருக்கின்றனர். அதற்காக, 80 வயதுக்கு மேலான முதியவர்களின் பட்டியலை, டெங்கு பணியாளர்கள் மூலம் கணக்கெடுத்து, அவர்களுக்கான அஞ்சல் வாக்குகளில் முறைகேடு செய்ய திட்டம் வைத்திருக்கிறது.
இதனால் பாக முகவர்கள் விழிப்புணர்வோடு இருந்துவரும் தேர்தலில் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்" என்றார்
இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் தவசியின் மருத்துவச் செலவுகளை திமுக எம்எல்ஏ சரவணன் ஏற்பு!