திருவள்ளூர்: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏரி நிரம்பின, இதனால் இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வந்தன.
தற்போது, கோடை வெயில் காரணமாக ஏரியில் நீர் வறண்டுள்ள நிலையில், நகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. ஏரியில் கழிவு நீர் கலப்பதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றம் அப்பகுதி மக்களை அவதிப்பட வைத்துள்ளது. எனவே, இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!