ETV Bharat / state

கோவிட்-19 பாதிப்பால் திணறும் திருவள்ளூர் - 416 பேருக்கு பாதிப்பு!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 416 பேருக்கு கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பால் திணறும் திருவள்ளூர் - 416 பேருக்கு பாதிப்பு!
கோவிட்-19 பாதிப்பால் திணறும் திருவள்ளூர் - 416 பேருக்கு பாதிப்பு!
author img

By

Published : Jul 24, 2020, 5:41 AM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 10 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்து 547 பேர் 14 நாள்கள் தனிப்படுத்தல் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.

மீதமுள்ள 3 ஆயிரத்து 892 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூரில் உள்ள மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 26 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளான ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருவேற்காடு, சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கடம்பத்தூர், திருவாலங்காடு புழல், பெரியபாளையம், பூண்டி, திருமழிசை, ஊத்துக்கோட்டை, திருநின்றவூர் போன்ற இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

இந்த மருத்துவ முகாம்களில் 416 பேருக்கு நேற்று (ஜூலை23) ஒரே நாளில் கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்தப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் தங்களை இணைத்து பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.