ETV Bharat / state

திருவள்ளூரில் வீடு எரிந்து சாம்பல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பத்தினர்

திருவள்ளூரில் மின் விபத்தால் வீடு எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வீடு எரிந்து சாம்பல்
வீடு எரிந்து சாம்பல்
author img

By

Published : Dec 22, 2021, 11:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வடிவேல், கனகவல்லி தம்பதி.

மேல்நல்லாத்தூர் ஊராட்சி இடுகாட்டில் வடிவேல் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று (டிசம்பர் 21) இரவு தனது வீட்டில் வடிவேல் அவரது மனைவி, மகனுடன் படுத்து உறங்கினார்.

திடீரென காலை 5 மணிக்கு மின் விபத்தால் வீடு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது வீட்டிலிருந்த மூவரும் உடனே வெளியேறினர். திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இருப்பினும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமானது. தீ விபத்தால் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம், முக்கியச் சான்றிதழ்கள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்தன. இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Viral Video: பைக்கில் பாய்ந்த பைரவர்; தலைக்கவசத்தால் தப்பிய காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.