திருவள்ளூர்: காமராஜர் சிலை அருகே உள்ள டீ கடை அருகே, நேற்று (ஏப். 24) இரவு தனது நண்பருடன் தொலைபேசியில் சண்டையிட்டு கொண்டிருந்த பெயிண்டரை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என, அந்தக்கடையின் கேசியார் தவறாக புரிந்து கொண்டுள்ளார். இதனால் பெயிண்டர் ராஜி மற்றும் கேஷியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கேசியர், பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சுமார் 5 லிட்டர் பாலை எடுத்து பெயிண்டர் மீது ஊற்றியுள்ளார். இதில், பெயிண்டருக்கு வலது கை மற்றும் தோள்பட்டை உள்ளிடயிடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று டீக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு, பெயிண்டரை மிரட்டி தான் குடிபோதையில் செய்தது தவறு என்று எழுதி வாங்கிக்கொண்டுள்ளனர். மேலும் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்த நடவடிக்கை எடுக்காமலும் டீக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிய படாமலும் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த பெயிண்டர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:கடனுக்கு டீ தர மறுத்த கடையை அடித்து உடைத்தவருக்கு நீதிமன்றம் வைத்த செக்