ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியை 'திருடன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக பாஜக-வின் செய்திதொடர்பாளர் மீனாட்சி லேகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் மோடியை அவதூறாக பேசிய ராகுல் காந்தியை நீதிமன்றம் எச்சரித்துள்ளதால், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கோரியும், காங்கிரஸ் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை கைவிடக் கோரியும் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில செயலாளர் கரு. நாகராஜ், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், அஸ்வின், மாவட்ட செயலாளர் பாலாஜி, கருணாகரன், திருவள்ளூர் மாவட்ட நகர தலைவர் சதீஷ், பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
’ரஃபேல் வழக்கில் கற்பனைக் கதைகளை கட்டுவதை காங்கிரஸ் தவிர்க்கணும்’ - வானதி சீனிவாசன்