ETV Bharat / state

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்
author img

By

Published : Jul 27, 2021, 8:12 AM IST

திருவள்ளூர்: மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது.

கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு

இதுகுறித்து திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கூறும்போது, "நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசின் அறிவுறுத்தல், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு ஆகியவற்றை மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

இதை தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அதிகத்தூரில் இயங்கிவரும் லான்சர் கார் கம்பெனியில் நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய தொகை முழுமையாக கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடன் கோரிக்கை மனு அளித்தோம்" என்றார்.

இதையும் படிங்க: ரூ.33 லட்சம் கோழிப் பண்ணை மோசடி- நால்வருக்கு மூன்றாண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.