ETV Bharat / state

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்! - திருவள்ளூர்

திருவள்ளூர்: திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்!
author img

By

Published : Jul 25, 2019, 6:49 PM IST

ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தொடங்கிய கிருத்திகை திருவிழா இன்று அதிகாலை தொடங்கி, முதலில் மூலவர் முருகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்பு தங்க கவச அலங்காரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு முருகன் காட்சி அளித்தார். இதேபோல் காவடி மண்டபத்தில் மூலவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியை காண வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, காவடி எடுத்தும் உடலில் அலகு குத்திக் கொண்டும், மயில் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்தும் தங்களின் நோர்த்திக் கடன்களை செலுத்தினர்.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்!

மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் பக்தி இன்னிசை பாடல்களை பாடியவாறு பக்தர்கள், மலைக்கோயிலில் மிக நீண்ட வரிசையில் நின்று, சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி முழுவதும் 300க்கும் மேற்பட்ட போலீசார், திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள்.

இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்க்க முருகன் கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

Intro:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி விழா காவடி எடுத்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம்.Body:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆடி பரணி விழா காவடி எடுத்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.