திருவள்ளூர்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்புக்கு மானியம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெபக்குமாரி அனி கூறியிருப்பதாவது, "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 80 கிராம ஊராட்சிகளில் 3 எண்கள் மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 141 கிராம ஊராட்சிகளில் 4 எண்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக காளான் குடில் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 7 காளான் குடில்கள் தலா 600 சதுர அடி பரப்பளவில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகவும் அல்லது https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய 7010288845 , 9942659155 எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெண்களுக்கு மட்டும் பெட்ரோல் போடும் 'பிங் பம்ப்' திட்டம் புதுச்சேரியில் அறிமுகம்!