ETV Bharat / state

திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணம் திருட்டு!

திருவள்ளூர்: கவரைப்பேட்டை அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை கவரைபேட்டை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணம் திருட்டு

author img

By

Published : Oct 29, 2020, 5:21 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து என்பவருக்கும் திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சி கவரைபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தம்பதிக்கு அன்பளிப்பாக மொய் பணம் கொடுத்தனர். அதை அவர்கள் தங்களது உறவினர் ஒருவரிடம் கொடுத்துள்ளனர்.

அப்போது மணமேடை அருகே வந்த அடையாளம் தெரியாத நபர் பணம் வைத்திருந்த உறவினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சாப்பிட செல்லுமாறு அறியுறுத்தினார். அதை நம்பி பணத்தை கொடுத்து விட்டு அந்த உறவினரும் சாப்பிட சென்றுள்ளார்.

உடனே மொய் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடிச் சென்ற மொய் பணம் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.