திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தைச்சேர்ந்தவர் வரதராஜுலு (85). இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று (ஏப்.14) வரதராஜுலுக்கும் அவரது மகன் ரகுராமன் (54) என்பவருக்கும் இடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது போதையில் இருந்த ரகுராமன் தந்தையை வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து, தலையில் பலமாக அடித்துள்ளார். இதில், பலத்த படுகாயமடைந்த வரதராஜூலு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர், ரகுராமனிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் கொலை செய்தது உறுதியான நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.11 லட்சம் ரொக்கம், 30 லட்சம் நகை பறிமுதல்!