திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் குட்டி விமானம் ஒன்று சேதமடைந்து காணப்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விமானத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் டார்கெட் என ஆங்கிலத்திலும் 71-45 என்ற குறியீடும் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இந்த விமானம் பொறியியல் மாணவர்கள் தயாரித்த விமானமாக இருக்கக்கூடும், இருப்பினும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.