திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட காட்டூர் கிராமத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இந்தப் பயிற்சி மையத்தில் அழகு கலை பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதற்கான தொடக்க விழாவில் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி நீலவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ஆன்லைன் மூலம் காணொலி காட்சியில் அதானி காட்டுப்பள்ளி துறைமுகம், அதானி அறக்கட்டளை உயர்அலுவலர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
இதனை அதானி அறக்கட்டளை காட்டுப்பள்ளி குழுமத்தினர் ஏற்பாடு செய்து நடத்தி வைத்தனர். 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பயிற்சி மையத்தில் முதல் கட்டமாக அழகு கலை பயிற்சிக்கு 25 நபரும், தையல் கலை பயிற்சி 25 நபர்களுக்கு என 50 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.