ETV Bharat / state

வழக்கறிஞர் கொலை வழக்கு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது

திருவள்ளூரில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கறிஞர் கொலை வழக்கு
வழக்கறிஞர் கொலை வழக்கு
author img

By

Published : Jul 20, 2021, 8:09 AM IST

Updated : Jul 20, 2021, 10:59 AM IST

திருவள்ளூர்: வெள்ளரி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வெங்கடேசன் (37). இவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சத்யா (30), தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்பது தொடர்பாக ஆலோசிக்க வழக்கறிஞர் வெங்கடேசனிடம் சென்றுள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சத்யாவை தனியாக அழைத்துச்சென்ற வழக்கறிஞர் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சத்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் ஜூலை 18ஆம் தேதி இரவு, சத்யா வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கறிஞருக்கு வெட்டு

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், வழக்கறிஞரை சரமாரியாக வெட்டினர். மேலும், அவர்களது மகள் சத்யாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு மயங்கிய நிலையில் இருந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை விசாரணை

இதையடுத்து, சத்யாவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சத்யாவின் பெற்றோர், உறவினர்கள் தான் இந்தக் கொலை சம்பவத்திற்குக் காரணம என தெரியவந்தது. இதையடுத்து, சத்யாவின் தந்தை சங்கர், தாய் சின்னம்மா, தங்கை சங்கீதா, தம்பி வினோத், தங்கையின் கணவர் வெங்கடேசன், சித்தி தேவி, உள்ளிட்ட ஆறு நபர்களை காவல் துறையினர் நேற்று (ஜூலை 19)கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சத்யாவின் குடும்பத்தினர் மலைவாழ் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்தவர் என்பது தெரியவந்தது. சத்யா தவறான தொடர்பில் இருந்ததை பலமுறை கண்டித்தும், கண்டு கொள்ளாமல் உதாசினபடுத்தியதால் கொலை நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

இதையும் படிங்க: விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணுடன் குடும்பம் நடத்திய வழக்கறிஞர் வெட்டிக்கொலை

Last Updated : Jul 20, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.