ETV Bharat / state

மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவர்கள் போராட்டம்! - SFI மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஆவடியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு, மண்டியிட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள்
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள்
author img

By

Published : Nov 27, 2019, 11:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கிவரும் விஜயந்தா பள்ளியில் 2018-19ஆம் ஆண்டில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி துறை சார்ந்த 30 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இந்த முறைகேட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருப்புத் துணியால் கண்களை கட்டிகொண்டு, மண்டியிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவல் துறையினர், மாணவர்களிடம் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுங்கள் என அறிவுறுத்தி அனுப்பினர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள்

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை மாணவர்கள் கூறினர். இந்த கோரிக்கை மனுவை ஏற்ற ஆட்சியர் மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்ளுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினியை வழங்க செய்கிறோம் என உறுதி அளித்ததின் பேரில் அங்குகிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஐ-எம் ஆர்ப்பாட்டம்!

Intro:திருவள்ளூர் அடுத்த ஆவடியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் கணினிப் பொறி படிப்பு முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு மண்டியிட்டு ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

Body:திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கிவரும் விஜயந்தா பள்ளியில் 2018 19 ஆண்டில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் கணிப்பொறி துறை சார்ந்த 30 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படவில்லை இந்த முறைகேட்டை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருப்புத் துணியால் தங்களது கண்களை கட்டி கொண்டு முட்டிபோட்டுக்கொண்டு இந்திய மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது அங்கு பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுங்கள் என அறிவுறுத்தி அனுப்பினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை கூறிய மாணவர்களிடம் ஆட்சியர் இந்த கோரிக்கை மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து உரியதை செய்கிறேன் என்று உறுதி அளித்ததின் பேரில் அங்கு இருந்து மாணவர்கள் சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.