தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு பிரிவுகளாகத் தொடர்ந்து இரவு பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதனடிப்படையில் ஆந்திர மாநிலத்தையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் பிரதான கூட்டுச் சாலையான பெத்திக்குப்பம் கூட்டுச் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (மார்ச் 19) அதிகாலையில் இருந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் திருமுள்ளை பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (55), மகேந்திரன் (28) ஆகிய இருவரும் இறால் குஞ்சுகள் வாங்குவதற்காகத் தமிழ்நாடு எல்லை மார்க்கமாக கூவத்தூர் செல்லும்போது, அவர்களைச் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.3,00,000 இருந்தது. பின்னர் அப்பணத்தை தேர்தல் அலுவலர் கார்த்திக் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்து பணத்தை தேர்தல் துணை அலுவலர் மகேஷிடம் கொடுத்தனர். பின்னர் முறையாகச் சீல்வைத்து பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வாகன சோதனையில் 5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பறிமுதல்!