ETV Bharat / state

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - 18 ton ration rice illegal transfer

திருவள்ளூரில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநரை கைது செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

author img

By

Published : Feb 11, 2022, 10:23 AM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் விஜயநல்லூர் சுங்கச்சாவடி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் நந்தினி உஷா ஆகியோர் கொண்ட காவல் துறை விஜயநல்லூர் சோதனைச்சாவடி அருகே செங்குன்றம் பகுதியிலிருந்து ஆந்திரா நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது 18 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி ஏர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரகுமார் என்பவரைக் கைது செய்தனர்.

மேலும் ஆந்திராவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை மீட்ட திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது... யார் இந்த ரேஷன் அரிசியைக் கடத்தினார்கள் என்பது குறித்த விசாரணையைக் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறை ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Video Leak - லஞ்சம் வாங்கிய போலி உணவுத்துறை அலுவலர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.