ETV Bharat / state

ஊராட்சி மன்றத் தலைவருக்கு அரிவாள் வெட்டு; இருவர் கைது

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிராமத்தினர் சாலை மறியல் நடத்தியதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரிவாள் வெட்டு
கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ்க்கு
author img

By

Published : Oct 21, 2021, 6:53 PM IST

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் யுவராஜ், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருவர் கைது

மேலும், கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையிலான தனிப்படைக் காவல் துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து அப்பகுதியைச் சார்ந்த 6 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் அஜித்குமார், நாகராஜன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர் ஒருவரே இக்கொலை முயற்சி சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக, அவரின் உறவினர் மற்றும் பெரிய வளர்புரம் பகுதியைச் சேர்ந்த இருவரை தனிப்படை காவல்துறைத் தேடி வருகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக்கோரி போராட்டம்

தனியார் நிறுவனத்தில் சலுகை

இந்த விசாரணையில் கொட்டையூர் ஊராட்சிப் பகுதியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினருக்கு, அப்பகுதியில் இருந்த தனியார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து வந்ததாகவும்; தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் யுவராஜ், அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் தலைவரின் உறவினர் பெற்ற சலுகைகளுக்கு தடையாகக் கருதப்பட்டுள்ளார்.

மேலும், பலமுறை ஊராட்சி மன்றத்தலைவர் யுவராஜ் இடம் முறையிட்டும் சலுகைகளை வழங்க அவர் மறுத்துவிட்டதால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினரிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்

மேலும், இன்று காலை கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேலான பொதுமக்கள், மப்பேடு காவல் நிலையம் அருகே பேரம்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சதாசிவத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி சந்திரதாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உண்மையான குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழ்நாடு அரசின் முடிவு கவலையளிக்கிறது - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.