சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நேற்று (செப்.25) மாலை 7 மணியளவில் புறப்பட்டு இன்று (செப்.26) காலை நான்கு மணி அளவில் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக அவரது மகன் எஸ்.பி. சரண் பண்ணை வீட்டுக்கு வந்தடைந்தார். தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு கிலோ மீட்டர் முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து வருகின்றன. பாதுகாப்புக்காக நான்கு டிஎஸ்பி உட்பட 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (செப்.26) காலை 7 மணி முதல் திரைப்பிரபலங்கள் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 10 மணி முதல் நல்லடக்கம் செய்யப் படுவதற்கான பணிகள் தொடங்கி, நண்பகள் 12 மணிக்குள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!