ETV Bharat / state

காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர்... டிக்கியில் கட்டுக்கட்டாய் பணம் - வழக்கில் புதிய திருப்பம்

author img

By

Published : Jul 16, 2020, 4:49 PM IST

Updated : Jul 16, 2020, 5:10 PM IST

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து எளாவூர் வழியாக சென்னைக்குக் கடத்திவரப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணம், பிரபல நகைக்கடை வியாபாரிக்குச் சொந்தமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

crime
crime

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று (ஜூலை 15) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் ஆந்திர மாநிலம் ஓங்கோலிலிருந்து வருவது தெரியவந்தது. காரிலிருந்த மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், காரை காவல் துறையினர் சோதனையிட்டனர்.

அதில், காரின் டிக்கியில் குப்பை போல் இருந்த நான்கு பைகளில் 1 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த ஓங்கோலைச் சேர்ந்த லட்சுமி நாராயணன்(54), வசந்த்(35), சிலுக்கலூர்பேட்டையைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். காரையும் பணத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், கைதுசெய்த மூவரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினர் கணக்கீடு செய்தபோது, 5 கோடியே 22 லட்சம் ரூபாய் அதிலிருந்தது தெரியவந்தது. மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து எல்லைப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த வாகனம் எத்தனை முறை கடந்திருக்கிறது என்பதையும் சோதனை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில், இந்தப் பணம் ஆந்திர மாநில அமைச்சர் பலினேனி ஸ்ரீநிவாஸ், ஓங்கோலிலிருந்து கோவையில் உள்ள ஒரு முக்கியப் புள்ளிக்கு அனுப்பிவைத்ததாகக் காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து காணொலி மூலம் பதிலளித்த பலினேனி ஸ்ரீநிவாஸ், "எனது பெயரைக் காரில் ஸ்டிக்கராக ஒட்டி தப்பிக்க முயற்சித்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறை கைப்பற்றிய பணம், கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும், அந்தக் காருக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கார் தமிழ்நாடு பதிவெண்களைக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான செய்தி பரப்பப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

தற்போது, இதில் முக்கியத் திருப்பமாக காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் செங்கையிலிருந்து நகைகளை வாங்க அனுப்பிய ஓங்கோலைச் சேர்ந்த நல்லமல்லி பாபு என்ற நகை வியாபாரிக்குச் சொந்தமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்!

Last Updated : Jul 16, 2020, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.