ETV Bharat / state

திருவள்ளூரில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு! - Thiruvallur district news

திருவள்ளூர்: மாவட்டத்தில் காய்கறி பயிரிடும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!

author img

By

Published : Jul 31, 2020, 12:54 AM IST

தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது. அதன்படி ஆண்டுதோறும் அனைத்து முக்கியக் காய்கறிகளும் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவுச் செடிகளின் விலைப்பட்டியல், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அடங்கல், ஆதார் எண், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகிய விவரங்களுடன் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திருவள்ளூர் தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.