திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சிறுகும்மி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து அதே பகுதியை சேர்ந்த மோகன் அம்மாள் என்பவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார்.
இதனால் கிராமத்திற்கு வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது என்றும், இதனால் சில நேரங்களில் பேருந்துகள் கிராமத்திற்கு வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆக்கிரமித்து கட்டியுள்ள சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தக் கோரி வருவாய் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினருடன் வந்த வருவாய் துறை அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புச் சுவரை இடித்து தள்ளினர்.