தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிடக்கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சென்னை வடக்கு மாவட்டம் 26ஆவது வார்டில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்; மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம், மாதவரம் மண்டல அலுவலர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
திமுக மாதவரம் பகுதி துணைச் செயலாளர் சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள், மாதவரம் மண்டல அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய ஊராட்சி நிர்வாகம்!