திருவள்ளூர் மாவட்டத்தில் ஹோட்டல்கள், திரையரங்குகளைப்போல், தங்களுக்கும் விலக்கு அளிக்கக்கோரி ஒலி, ஒளி அமைப்பு நலச்சங்கத்தின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. பேரணியானது மீரா திரையரங்கத்திலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை நடைபெற்றது. ஒலி, ஒளி அமைப்பின் தலைவர் ரங்கநாதன், செயலாளர் சுந்தர், பொருளாளர் ஞானராஜ், நிர்வாகிகள் ரங்கன், அண்ணாதுரை ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், “நாங்கள் பல ஆண்டுகளாக சுபகாரியங்கள், துக்க நிகழ்ச்சிக்கு பந்தல் அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், இடத்திற்கு ஏற்றார்போல் மேடை அமைத்தல், இசைக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் சவுண்ட் சர்வீஸ் எனப்படும் ஒலி, ஒளி அமைப்பு பணியில் சுமார் எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஹோட்டல்கள், திரையரங்குகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுபோல், எங்களுக்கும் ஐம்பது விழுக்காடு அடிப்படையில் நாங்கள் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி!