ETV Bharat / state

மநீம கட்சி வேட்பாளர் உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு! - வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருவள்ளூர்: மநீம கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 16 வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

Rejection
Rejection
author img

By

Published : Mar 20, 2021, 8:44 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (மார்ச் 20) பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், இந்திய குடியரசு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 27 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இதில் இன்று 11 வேட்புமனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மநீம கட்சி வேட்பாளர் தணிகைவேல், இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் ஈகைமணி ஆகியோரின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன் நிராகரித்தார். அதற்குக் காரணம் அவர்களது மனுவில் குளறுபடி இருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் ஈகைமணி தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த விவகாரத்தைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் அலுவலரிடமும் கொண்டுசென்று நியாயம் கேட்கப்படும்.

அங்கும் நியாயம் கிடைக்கவில்லையென்றால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.