திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் ஊராட்சிக்குள்பட்ட சர்வே எண் 311/6 உள்ள 81 ஏர்ஸ் நிலம் ஏழுமலை-மல்லிகா தம்பதி பெயரில் இருந்தது. சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அவர்கள் 50ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு:
இந்நிலையில், இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனக் கூறி வருவாய்த் துறையினர் இன்று (ஜூலை 16) காலை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசனுடம் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு, போடப்பட்டிருந்த கொட்டகை, நிலத்தில் அமைந்திருந்த ஏழுமலை சமாதி போன்றவற்றை அகற்ற முன்வந்தனர். இதனையறிந்த மூதாட்டி மல்லிகா, அவரது மகன் குடும்பத்தார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அரசு அலுவலர்கள் நடவடிக்கை:
பின்னர், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கதறி அழுது அலுவலர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.
அதன் பிறகு நிலத்தில் போடப்பட்டிருந்த கொட்டகை, சமாதி போன்றவற்றை வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் சரண்யா, வருவாய் ஆய்வாளர் கௌதம், கிராம நிர்வாக அலுவலர் மதன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு