திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ கோயிலில் உள்ள வைத்திய வீரராகவ சுவாமியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து பிரேமலதா செய்தியாளரிடம் பேசுகையில்,
நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை ரஜினிகாந்த் இனி தவிர்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்விக்கு, இந்த சட்டம் குறித்து மக்களுக்கு இன்னும்கூட தெளிவான புரிதல் இல்லை ஆகையால் இதுகுறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படியுங்க: ’சி.ஏ.ஏ.வை ரஜினியை வைத்து திசை திருப்ப ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சி...!’