சென்னை பூவிருந்தவல்லியில் புரட்சி பாரத கட்சி சிறுபான்மை பிரிவு சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசு செயல்பட்டுவருகிறது என்றும் மதத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் புரட்சி பாரதம் சார்பாக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் எதிரானதாக இருக்கிறது. கிறிஸ்தவ மக்களும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பின்னர் நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியார்களுடன் கேக் வெட்டி, அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!