திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தின் காந்தி கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருள்கள், மருத்துவத் தேவைகள் உள்ளிட்டவற்றைப் பெற கூட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஐந்து நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது.
இங்கு கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரடியாக ஆய்வுசெய்து, உணவு, நிவாரணப் பொருள்களை விரைந்து வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி