திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுலாபுரம் ஊராட்சியில் தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இங்கு மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் சாம்பல் கழிவுகள் உரிய பாதுகாப்பு இன்றி வெளியேற்றப்படுவதால் காற்று மூலம் பரவும் நிலக்கரி சாம்பல் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், விளைநிலங்கள் மீது படர்வதால் வேளாண்மை பாதிப்புக்குள்ளாகிவிட்டது.
இதனால் அப்பகுதி உழவர்கள் தங்களின் கால்நடைகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் நிலக்கரி சாம்பல் கழிவுகளைச் சுவாசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், உடல் அரிப்பு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் தீர்வு எட்டாத நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட நிர்வாகமாவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கவிருக்கும் ஸ்டாலின்