திருவள்ளூர்: ரிலையன்ஸ் டிரன்ட்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசு புதிய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், திருவள்ளூரில் ரிலையன்ஸ் டிரன்ட்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன், மாநில இளைஞர் எழுச்சி பாசறை துணைச் செயலாளர் தளபதி சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள கார்ப்பரேட்களுக்கு ஆதரவான புதிய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு