ETV Bharat / state

இரண்டு வாரங்களில் நிரம்பும் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்! - Poondi Sathyamoorthy Lake Reservoir filling up

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது இன்னும் இரண்டு வாரங்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

புழல் ஏரி
Poondi Lake
author img

By

Published : Oct 29, 2020, 10:38 PM IST

சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை போக்க திருவள்ளூர் மாவட்டம் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து பூண்டி ஏரிக்கு 8 முதல் 12 டிஎம்சி அளவு தண்ணீர் பெற்று இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை வறண்டு கிடந்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்களுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதிநீர், கண்டலேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பூண்டி ஏரியை வந்தடைந்தது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கங்கை கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்தானது இன்று (அக்.29) காலை நிலவரப்படி வினாடிக்கு 845 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது.

அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் சுமார் ஆயிரத்து 600 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

தொடர்ந்து மழைக்காலம் என்பதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீரானது பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு, இன்னும் இரண்டு வாரங்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை கனமழை: முன்னேற்பாடுகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.