திருவள்ளூர்: சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டி நீர்மட்டம் தற்போது 3.95 அடியாக உயர்ந்துள்ளது. அதன் முழுக் கொள்ளளவு உயரம் 35 அடி ஆகும். ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் பள்ளிப்பட்டு வழியாக நகரின் மூலம் விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
மேலும், கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி தளத்திலிருந்து ஆயிரம் கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. சத்தியமூர்த்தி சாகர் அணையின் முழுக் கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடியில், தற்போது 2,807 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
புழல் நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில், தற்பொழுது 19.42 அடியாக உள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில், தற்போது 21 அடியாக உள்ளது.
மேற்கண்ட இரண்டு ஏரிகள் நீர் கால்வாய்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் வழியாகச் செல்லும் கால்வாய் ஆக உள்ளது. எனவே, சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து வெள்ள நீர் விநாடிக்கு 1000 ஆயிரம் கனஅடி கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படுகிறது.
இந்த நீர் ஆற்றின் மொத்த கொள்ளளவில் உடன் ஒப்பிடும்போது, மிகச் சிறிய அளவே ஆகும். மேற்கண்ட வெள்ளநீர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தேக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து சோழவரம் ஏரிக்கு மேல் வரத்து கால்வாய் வழியாகச் சேகரிக்க பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆற்றம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, இறையூர், பீமன் தோப்பு, கோரக்க தண்டலம், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், சோம தேவன்பட்டு, ஆத்தூர், ஜெகநாதபுரம், பண்டி காவனூர், புதுக்குப்பம், கன்னி பாளையம், வன்னி பாக்கம் அசுவன் பாளையம், மடியூர், சீமா வரம், வெல்லி வாயல்சவடி, நாபாளையம், சடையஞ்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான் குப்பம், எண்ணூர், கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை