ETV Bharat / state

ஆவடியில் குடியரசு தின விழா; கொடியேற்றி மரியாதை செலுத்திய காவல் ஆணையர்!

ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆவடியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ஆவடியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
author img

By

Published : Jan 26, 2023, 4:09 PM IST

ஆவடியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

திருவள்ளூர்: இந்தியா முழுவதும் 74ஆவது குடியரசு தினத்தை ஒட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்றது. அந்த வகையில் திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 74ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பை ஏற்ற அவர், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். இந்த விழாவில் பரதநாட்டியம், வளைய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே நடனம் மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களுடன், ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உதவிய நபர்கள், திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் காவல் துறையினருக்கு உதவிய நபர்கள் உள்ளிட்டோருக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமாரி, காவல் துணை ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து விருது பெற்ற திருச்சி தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.