ETV Bharat / state

கைப்பந்துப் போட்டியால் வந்த பகை - இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

திருவள்ளூர்: திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

murder
author img

By

Published : Aug 18, 2019, 11:59 AM IST

Updated : Aug 18, 2019, 3:52 PM IST

சென்னை அருகே பெருமாள்பட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லல்லு என்பவர், அப்பகுதியில் கைப்பந்துப் போட்டி நடத்துவதற்காக வெளியூரிலிருந்து ஒரு குழுவை வரவழைத்துள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த பால்தினகரன், விக்னேஷ், ஜாஹிர் உசேன், மகேஷ் ஆகிய நால்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளியூரிலிருந்து யாரும் வந்து ஆடக் கூடாது என்று கூறியதால் தகராறு
ஏற்பட்டு காவல் துறையினரால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது.

நல்ல முறையில் நடக்கவேண்டிய கைப்பந்துப் போட்டி நிறுத்தப்பட்டதற்கு லல்லு மற்றும் அவரது நண்பர் விமல்தான் காரணம் என நினைத்த அந்த நான்கு பேரும், லல்லுவின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லல்லு, அந்த நால்வரையும் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த இரண்டே மாதத்தில், அந்த நான்கு பேரில் ஒருவரான பால் தினகரன் என்பவரது வலது கை வெட்டப்பட்டது. அதேபோல் ஜாகிர் உசேன் என்பவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர் தப்பியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் பெருமாள்பட்டு பகுதியில் விக்கி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த மகேஷ், தனது நண்பர்களுக்கு நேர்ந்த கதியால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து விமலை சரமாரியாக வெட்டியுள்ளார். அந்த வழக்கில் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜரானபின் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த மகேஷை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படும் இளைஞர்

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருத்தணி காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே பெருமாள்பட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லல்லு என்பவர், அப்பகுதியில் கைப்பந்துப் போட்டி நடத்துவதற்காக வெளியூரிலிருந்து ஒரு குழுவை வரவழைத்துள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த பால்தினகரன், விக்னேஷ், ஜாஹிர் உசேன், மகேஷ் ஆகிய நால்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளியூரிலிருந்து யாரும் வந்து ஆடக் கூடாது என்று கூறியதால் தகராறு ஏற்பட்டு காவல் துறையினரால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது.

நல்ல முறையில் நடக்கவேண்டிய கைப்பந்துப் போட்டி நிறுத்தப்பட்டதற்கு லல்லு மற்றும் அவரது நண்பர் விமல்தான் காரணம் என நினைத்த அந்த நான்கு பேரும், லல்லுவின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லல்லு, அந்த நால்வரையும் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த இரண்டே மாதத்தில், அந்த நான்கு பேரில் ஒருவரான பால் தினகரன் என்பவரது வலது கை வெட்டப்பட்டது. அதேபோல் ஜாகிர் உசேன் என்பவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர் தப்பியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் பெருமாள்பட்டு பகுதியில் விக்கி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த மகேஷ், தனது நண்பர்களுக்கு நேர்ந்த கதியால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து விமலை சரமாரியாக வெட்டியுள்ளார். அந்த வழக்கில் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜரானபின் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த மகேஷை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படும் இளைஞர்

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருத்தணி காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருத்தணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த கூட்டாளிகளை பார்க்க வந்தவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம்: ஏற்கனவே ஒருவரை கொலைசெய்து இரண்டு பேரை கொலை செய்ய முயற்சி செய்ததில் முக்கிய சாட்சியாக இருந்தவர் தான் கொலை செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Body:திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் பால் தினகரன், விக்கி என்ற விக்னேஷ், மகேஷ், ஜாஹிர் உசேன் ஆகிய இந்த நான்கு பேரும் 2018 இல் வாலிபால் போட்டி நடத்த திட்டமிட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லல்லு என்பவர் பெருமாள் பட்டியில் உள்ள ஐயப்பன் என்கிற விமல் என்பவரது கூட்டாளியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். வாலிபால் போட்டிக்காக சென்னையிலிருந்து லல்லு என்பவர் ஒரு டீமை வரவழைத்துள்ளார். அப்போது இந்த நண்பர்கள் நான்கு பேரும் வெளியூரில் இருந்து யாரும் வந்து ஆட கூடாது என்று சொன்னதால் தகராறு ஏற்பட்டு காவல்துறையினரால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டி நிறுத்தப்பட்டதற்கு லல்லு மற்றும் விமல் தான் காரணம் என நினைத்த அந்த நான்கு பேரும் சேர்ந்து லல்லு ரவுடி என்பது தெரியாமல் விமல் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். சென்னையில் பிரபல ரவுடியான லல்லு வீட்டில் இல்லாத நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அறிந்து உங்கள் 4 பேரையும் கொலை செய்கிறேன் பார் என்று சபதமிட்டு உள்ளார். இதனை அடுத்து இரண்டே மாதத்தில் பால் தினகரன் என்பவரது வலது கையை வெட்டி உள்ளனர். ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். அதேபோல் ஜாகிர் உசேன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்து அதில் அவர் தப்பித்து விட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெருமாள்பட்டு பகுதியில் விக்கி என்ற அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருப்பவர் மகேஷ் தனது நண்பர்கள் கையை வெட்டியும் கொலை செய்ய முயற்சி செய்தும் ஒருவரை கொலையும் செய்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ் கடந்த மாதம் 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பெருமாள்பட்டு பகுதியில் முடி வெட்டிக் கொண்டிருந்த ஐயப்பன் என்கிற விமலை சரமாரியாக வெட்டியுள்ளனர். ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விமல். இந்நிலையில் ஐயப்பன் என்கிற விமலை வெட்டிய வழக்கு விசாரணைக்காக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வந்துள்ளனர். ஆனால் நீதிபதி இல்லாத காரணத்தால் திருத்தணி நீதிமன்றத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக மகேஷும் திருத்தணி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கு முடிந்து கூட்டாளிகள் சென்ற பிறகு மகேஷ் தனியாக வந்து கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டினர். அலறி அடித்து ஓட்டம் பிடித்த மகேஷ் அங்குள்ள ஓட்டலுக்குள் புகுந்தார். ஹோட்டலுக்குள் புகுந்த மகேசை அந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டித் தள்ளினர். அப்பொழுது ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நண்பர்களை கொலை செய்ய முயற்சி செய்தும் ஒருவரை கொலை செய்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவரை நேற்று ஒரு கும்பல் வெட்டி தீர்த்துக் கட்டியது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
Last Updated : Aug 18, 2019, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.