ETV Bharat / state

நடைபயணம் மேற்கொண்டு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு!

author img

By

Published : Dec 8, 2019, 8:01 PM IST

திருவள்ளூர்: நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இரு தனியார் நிறுவனங்கள் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

Plastic Awareness Walking
Plastic Awareness Walking

மத்திய பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் எஸ்டேட் மேலாண்மை நிறுவனமும் இணைந்து விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நடைபயணத்தில், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தூய்மை உறுதிமொழி பதாகைகளைப் பிடித்துக்கொண்டே நெகிழியிலிருந்து சுற்றுப்புறம் காப்போம் என்ற முழக்கங்களுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை, நிறுவன இயக்குநரும் விஞ்ஞானியுமான பாலமுருகன் தொடங்கி வைத்தார். அதன் பின் நெகிழியால் ஏற்படும் தீங்கு, அதனை ஒழிப்பதற்கான அவசியம் உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் கூறி சுற்றுப்புறங்களில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடைபயணம்

சுமார் ஐந்து கி.மீ தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சாலையில் கிடக்கும் நெகிழிப் பொருள்களை நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் அகற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க:

மனை வணிக அதிபர் கொலை வழக்கு: தனியார் வங்கி அலுவலர்கள் கைது!

Intro:Body:இந்திய அரசு பாதுகாப்பு துறையில் வழிகாட்டுதலின்படி தூய்மை இயக்கத்தின் இருவார அனுசரிப்பின் ஒரு பகுதியாக ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் எஸ்டேட் மேலாண்மை நிறுவனம் இணைந்து குப்பைகளை அகற்றி கொண்டே நடைபயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் தூய்மை உறுதிமொழி மட்டும் பதாகைகள் பிடித்துக் கொண்டே பிளாஸ்டிக்கில் இருந்து சுற்றுப்புறம் காப்போம் எனும் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை நிறுவன இயக்குனர் விஞ்ஞானி திரு பாலமுருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தினார் தொழிலாளர்களின் தங்கள் குடும்பம் உறுப்பினர்கள் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வேண்டினார்.

சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப அலுவலர்கள் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

வழியில் சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அனைவரும் அகற்றிக் கொண்டு சென்றதும் ஏந்திச் சென்ற தாயகரம் சிறப்பு காணொளி மற்றும் முழக்கங்கள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.