காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் திருவள்ளூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு மாரிமுத்து தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இன்று (ஏப்ரல்.23) காலை அவரது வீட்டில் ரத்த வாடை அடிப்பதாக விட்டின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.
அதில், மாரிமுத்து தம்பி சினிமா துறையில் வேலை செய்துவருகிறார். மாரிமுத்து சினிமாவில் நடிக்க விரும்பியுள்ளார். இந்நிலையில் வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மாரிமுத்து தம்பி கூறியுள்ளார். அதன்படி, தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு, அதனை மாரிமுத்து புகைப்படம் எடுத்து தம்பிக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாரிமுத்துவை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் கடையை சூறையாடிய காவலர்!