திருவள்ளூர்: பழவேற்காடு கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள், காலம் காலமாக கடலிலும், பழவேற்காடு ஏரியிலும் மீன் பிடித்து வருவதாகவும், ஆனால், நடுவூர் மாதாகுப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம் ஆகிய 3 மீனவ கிராம மக்கள் தங்களை மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனால் கடந்த 6 மாதங்களாக மீன் பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி கூனங்குப்பம் மீனவ கிராம மக்கள் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.
இரு தரப்பினரையும் பேசி பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை இல்லையெனில், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொடர் மழை: குடிசை வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்த சோகம்