ETV Bharat / state

ஊராட்சித் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: பணி செய்யவிடாமல் இடையூறு செய்யும் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சித் தலைவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவர்
ஊராட்சி மன்றத் தலைவர்
author img

By

Published : Oct 19, 2020, 8:09 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ. ராஜசேகரன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் இத்தேர்தலில் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் துணைத் தலைவராக வேறு வகுப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் துணைத்தலைவர் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஏதேனும் பணிக்கு நிதி ஒதுக்கும் பட்சத்தில் அதில் கையெழுத்திடாமல் தவிர்த்து வருவதாகவும், மக்கள் பணி செய்ய முடியாமல் ஊராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போகட்டும் என்ற கோணத்தில் துணைத்தலைவர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து இன்று (அக்.,19) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் ஏ.ராஜசேகரன் பொதுமக்களை ஒன்று திரட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த முறை ஊராட்சி மன்றத் தேர்தலில் ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் எனது தாயார் வெற்றி பெற்று சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தார்.

இந்தத் தேர்தலி்ல் இந்த ஊராட்சி பொதுப்பிரிவினருக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டதால், நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற சுந்தர்ராஜ் என்பவர் கடந்த 8 மாதங்களாக மக்களின் அடிப்படைத் தேவைகளான மின் மோட்டார் பழுது, பைப்லைன் உடைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இடையூறு செய்கிறார்.

கரோனா கால சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் எதிர்ப்பு, பணி ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க கையொப்பம் இடவும் மறுப்பு என அனைத்து பணிகளுக்கும் இடையூறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நான் பஞ்சாயத்து அலுவலகத்திற்கும், ஊருக்குள்ளும் வர எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றார்.

ஊராட்சித் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால் கிராம மக்களைத் திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்: நீதிகேட்டு மா.கம்யூ., போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.